சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல்வேறூ திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அதிக அலவில் வெளியாகின. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இன்று (ஜூலை 26) பல திரைப்படங்கள் வெளியாகிறது. இன்று வெளியாகும் திரைபடங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ராயன்
பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் இன்று(ஜூலை.26) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராயன் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த வரும் ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் ராயன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
டெட்பூல் வால்வரின்
மார்வெல் சினிமாடிக் யுனிவர்சில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களான டெல்பூல் மற்றும் வால்வரின் இணைந்து கலக்கும் 'டெட்பூல் வால்வரின்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் ரியான் ரெனால்ட்ஸ் டெல்ட்பூல் கதாபாத்திரத்திலும், வால்வரின் கதாபாத்திரத்தில் ஹக் ஜேக்மனும் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
விண்ணுடன்
குணா பழனிசாமி இயக்கத்தில் அசோக் குமார் மற்றும் யாழினி ராஜன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள விண்ணுடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும் ஒடிடியில் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இந்த வாரம் வெளியாகிறது. அந்த வகையில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடித்த வெப்பன் ஆஹா ஒடிடியில் இன்று வெளியாகிறது. அதேபோல் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ‘சட்னி சாம்பார்’ என்ற வெப் தொடர் வெளியாகிறது. இந்த தொடரில் யோகி பாபு, வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: துப்பாக்கியுடன் சின்னத்திரை நடிகை சுஜிதா.. வனத்துறை நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை! - Sujitha gun Video