சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் உருவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ்லில் நல்ல வசூல் சாதனை படைத்தது. ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்தது.
சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும், 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி, கட்சியின் மாநில மாநாடு அக்.27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று இருக்கின்றன. சமீபத்தில், மாநாட்டிற்கான பூமி பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "தவெக மாநாடு குறித்து கேள்வி - ஆவேசமடைந்த எஸ்ஏ.சந்திரசேகர்!
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது தி கோட் திரைப்படம். இதனை நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழக விநியோகஸ்தர் ராகுல் ஆகியோர் நேற்று கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் முதல் முறையாக தி கோட் திரைப்படம் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக ஆடியோ டிஸ்கிரிப்ஷன் முறையில் திரையிடப்பட்டது. இதனை அவர்கள் கேட்டு மகிழ்ந்தனர். தி கோட் திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்