விழுப்புரம்: தேர்தல் வரும் காலங்களில் எல்லாம் நடிகர்களின் அரசியல் பிரவேசம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. முன்னால் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி, எஸ் எஸ் ஆர், விஜயகாந்த் காலம் தொட்டு இன்று விஜய் வரை அது நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் 'நடிகன் அரசியல்வாதி ஆகிறான், அரசியல்வாதி நடிகன் ஆகிறான் வியப்பதற்கு ஒன்றும் இல்லை, இரண்டுக்கும் அடிப்படை நடிப்பு' என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் வரிகளோடு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார் தாடி பாலாஜி.
ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை இங்கே அப்படி இருக்கும் பொழுது நடிகர்கள் என்ன யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அப்படித்தான் சொல்லுகிறது அந்த போஸ்ட். சமீபகாலமாகத் தாடி பாலாஜி நடவடிக்கைகள் மக்களின் நலன் சார்ந்து இருப்பதைக் காணமுடிகிறது.
யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களைச் சென்று பார்ப்பது அவர்களுக்கு ஆதரவாக நிற்பது அவர்களுக்காகக் குரல் கொடுப்பது என்கிற அடிப்படையில் தாடி பாலாஜி செயல்படுவது ஒரு அரசியல்வாதி போல அவரை வெளிப்படுத்துகிறது என்ற அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர்களின் அரசியல் பிரவேசத்தை அள்ளிக்கொள்ள அரசியல் கட்சிகள் எப்போதும் தயாராக இருப்பது உண்டு. அந்த வகையில் யார் தாடி பாலாஜியை அனைத்துக் கொள்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடையே இருந்து வருகிறது.
சின்னத்திரை தொலைக்காட்சியில் நகைச்சுவையாக வந்தால் கூட ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை மக்களுக்கு வழங்குகிற பணியினை தாடி பாலாஜி சமீபகாலமாக செய்து வருவது அவரின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று கூறிவருகின்றன.
இதற்கு உதராணமாக கடந்தாண்டு கூட நடிகர் தாடி பாலாஜி “ விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாகவும்,தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணிபுரியத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார், மேலும் தனியாகக் கட்சி ஆரம்பிக்கும் ஆசை இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இதனால் தாடி பாலாஜியின் அரசியல் பிரவேசம் என்ன சொல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: நோ பொலிடிக்கல் கொஸ்டின்ஸ்.. லோகேஷுடன் இணையும் ரஜினிகாந்த்.. ரஜினியின் பளீச் பதில்!