ETV Bharat / entertainment

"வெற்றி துரைசாமியிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்" - இயக்குநர் வெற்றி மாறன்..! - IIFC

Director Vetrimaaran IIFC: இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை-பண்பாடு ஆய்வகம் [IIFC] சார்பில் மறைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

tamil-film-director-vetrimaaran-iifc-held-a-tribute-program-for-late-vetri-duraisamy
"வெற்றி துரைசாமியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்" - இயக்குநர் வெற்றி மாறன்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 4:41 PM IST

சென்னை: இமாச்சலப்பிரதேசம், கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கடந்த 4ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் உடன் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு வாடகை கார் ஒன்றில் கடந்த 4ஆம் தேதி பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற கார் கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பூர் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத், கின்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மட்டும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, 8 நாட்களாக நடந்த தொடர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து 5 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை-பண்பாடு ஆய்வகம் [IIFC] சார்பில் மறைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன், அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன், பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மதன்குமார், மருத்துவர் வந்தனா, ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் தாணு பேசும் பொழுது, "வெற்றி துரைசாமி மறைவால் மிக மிக சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானேன். அவருடன் பழகிய காலங்கள் சிறப்பான காலங்கள் ஆகும். இந்த பன்னாட்டுத் திரை மற்றும் பண்பாடு ஆய்வகம் திறப்பதற்கு நான் கொடுத்த தொகை மிகப் பெரிய உதவியாக இருந்ததாக மீண்டும் மீண்டும் நன்றி கூறினார்.

எப்பொழுது எனக்கு ஒரு கதையைத் தயார் செய்யப் போகிறாய் என்று நான் கேட்டதற்கு, வெற்றி துரைசாமி வெற்றிமாறனின் முழு சம்மதத்துடன் தான் தங்களிடம் வந்து படத்திற்கான கதையைக் கூறுவேன் என்று கூறினார். பக்தியுடனும் பாசத்துடனும் வெற்றிமாறனை குருவாகப் பாவித்துக் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவருக்கு இது பேரிழப்பாகும் எந்த தந்தைக்கும் இப்படி ஒரு துயரம் நிகழக் கூடாது" என்று கூறினார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும் பொழுது, "வெற்றி துரைசாமி சினிமா சம்பந்தப்பட்ட இடங்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது என்னுடைய மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். ஆனால், அவரிடம் நான் தான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எங்களிடம் நிறைய ஒத்துப் போகக்கூடிய பொதுவான பிடித்த விஷயங்கள் இருந்தன. அவை அனைத்தைப் பற்றியும் பேரார்வத்துடன் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதற்கான தேடல் அதிகமாக உள்ள மனிதர்.

அவர் ஒரு சிறந்த 'வைல்ட் லைஃப்' புகைப்படக் கலைஞர் ஆவார். ஏற்கனவே நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பில் சிறந்த புகைப்பட கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான பயணம் மேற்கொண்ட போது தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. என்னுடைய ஒரு ஒரு செயல்களிலும் அவருடைய பங்களிப்பு எப்பொழுதும் இருந்துள்ளது.

நாங்கள் IIFC உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த பொழுது அவர் தடையேதும் இல்லாமல் இங்கே செயல்படுத்தலாம் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவருடைய தொடர் ஆர்வத்தை இங்கே காண்பித்துக் கொண்டே இருந்தார். இப்படி ஒரு பேருதவி எல்லோராலும் முடியாது. இப்படி இன்னொருவரின் கனவில் பேரார்வத்துடன் செயலாற்றுவது என்பது எல்லாராலும் முடியாது.

எப்போதுமே உதவிக் கொண்டே இருக்கக்கூடிய மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே முடியும். அவருடைய மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அவரது மறைவை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த மாதிரியான காலகட்டங்களில் துணிச்சலாக எடுத்து வைக்கும் முன்னகர்வுகள் தான் நம்மையும் சமூகத்தையும் நம்மை விட்டுச் சென்றவர்களையும் நிலை நிறுத்தக் கூடியதாக இருக்கும்.

வெற்றி துரைசாமி நினைவாக IIFC சார்பாக முதல் திரைப்படம் எடுப்பவர்களுக்கும் 'வைல்டு லைஃப்' புகைப்பட கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். சிலரின் மறைவு தான் நம்மில் பாதியை எடுத்துச் சென்று விடும் அப்படி ஒரு மறைவு தான் வெற்றி துரைசாமியின் மறைவு" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியதால்தான்.. போர் பட இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.