புதுச்சேரி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடத்தி வரும் திரைப்படம் கோட். இத்திரைப்படத்தை இயக்குநர் வெட்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் மற்றும் நடிகைகள் சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, இவானா என பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
குறிப்பாக மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலையில் நடைபெற்றது.
ஒரு காலத்தில் புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் ஒன்றாக இருந்த இந்த முதலியார் பேட்டை ஏஎஃப்டி பஞ்சாலையில் தற்போது மூடப்பட்டுள்ளது. தற்போது இங்குப் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அண்மையில் கூட லால் சலாம் திரைப்படத்திற்காக ரஜினி வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் ரி ஏஎஃப்டி பஞ்சாலையில் நடைபெறும் சூட்டிங்கில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் பரவியது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் 2 மணி முதல் புதுச்சேரி ஏஎஃப்டி சாலையில் குவியத் தொடங்கினார்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏறப்பட்டது. திடீரென கூடிய கூட்டம் காரணமாக போலீசார் யாரும் அப்பகுதியில் இல்லை, இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பை முடிந்த நடிகர் விஜய் வேன் ஒன்றின் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் கூச்சலிடத் தொடங்கினர்.
மேலும் நடிகர் விஜய் மீது பூக்களை வீசத் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதிலுக்கு விஜய் அந்த மாலைகளை அணிந்து கொண்டு, ரசிகர்களுடன் வீசினார். பின்னர் ரசிகர்களுடன் செல்பி ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. நடிகர் விஜய் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், ரசிகர்களைச் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இதையும் படிங்க: நடிகர் மணிகண்டனின் லவ்வர் பட இசை வெளியீட்டு விழா!