ETV Bharat / entertainment

நான் நடிக்கும் திரைப்படங்களைப் பொக்கிஷமாகப் பார்ப்பேன்… மனம் திறந்த டாப்ஸி! - taapsee pannu about her films - TAAPSEE PANNU ABOUT HER FILMS

Actress Taapsee pannu: நடிகை டாப்ஸி தனது திருமணத்திற்குப் பிறகு அளித்துள்ள பேட்டியில் தனது திரை வாழ்வில் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதைத் தேர்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நான் நடிக்கும் திரைப்படங்களை பொக்கிஷமாக பார்ப்பேன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 3:57 PM IST

ஹைதராபாத்: நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி காஞ்சனா, ஆரம்பம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீரர் மதாய்ஸ் போவை நெருங்கிய உறவினர்கள் சூழ, ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி பன்னு கடந்த சில நாட்களாகப் பேசு பொருளாக இருந்து வருகிறார்.

அவர் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் திரைப்பட தேர்வு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் டங்கி பட கதாநாயகி டாப்ஸி, "எனது வேலையில் நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நான் எனது வேலை இல்லாத சொந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்.

அதனால் நான் எனது நேரத்தைப் பயன்படுத்தி ஒரு படத்தில் நடித்தால் அது உபயோகமானதாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நான் நடித்த திரைப்படங்களைப் பொக்கிஷமாகப் பார்க்க விரும்புகிறேன். அதனால் எனக்கு விருப்பமில்லாத படத்தில் நடிக்க மாட்டேன்" என கூறியுள்ளார்.

பேட்மிண்டன் வீரர் மதாய்ஸ் போவை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக டாப்ஸி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. உதய்பூரில் இருவருக்கும் கடந்த மார்ச் 21 முதல் 24 வரை சங்கீத், மெகந்தி நிகழ்ச்சிகளுடன் திருமணம் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து டாப்ஸியின் திருமண வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் பிரபல பஞ்சாபி பாடலுக்கு டாப்ஸி நடனமாடுகிறார்.

அதுமட்டுமின்றி டாப்ஸி, மதாய்ஸ் போ ஜோடியாக நடனமாடும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. டாப்ஸியின் திருமண வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் டாப்ஸி தரப்பிலிருந்து திருமணம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ஜிம்மில் இணைந்து வொர்க்-அவுட் செய்யும் சூர்யா, ஜோதிகா ஜோடி; வைரலாகும் வீடியோ! - Suriya Jyothika Workout Video

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.