ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னுவிற்கு தனது காதலரான மதாய்ஸ் போவுடன் உதய்பூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. மதாய்ஸ் போ பேட்மிண்டன் வீரர் ஆவார். தனியார் ஊடகத்திற்குக் கிடைத்த தகவலின்படி டாப்ஸிக்கு கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமண நிகழ்வில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு மார்ச் 20ஆம் தேதியன்று திருமண சடங்குகள் தொடங்கியுள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் அனுராக் காஷ்யப், பவாலி குலாடி ஆகியோர் கலந்து கொண்டனர். டாப்ஸி அனுராக் காஷ்யப் இயக்கிய தோபாரா மற்றும் தப்பாட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை கனிகா தில்லான் மற்றும் ஹிமான்ஷு சர்மா ஆகியோரும் டாப்ஸி திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார். அதேபோல் நடிகர் பவாலி குலாடி டாப்ஸி திருமணத்திற்கு முந்தைய சடங்கில் எடுத்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நிகழ்வில் டாப்ஸியின் தங்கை ஷாகுன் பன்னு, மற்றும் எவானியா பன்னு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டாப்ஸி தற்போது ’பிர் ஆயி ஹசேன் தில்ரூபா’ என்ற படத்தில் விக்ராந்த் மாசே மற்றும் சன்னி கவ்ஷலுடன் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஹசின் தில்ருபா படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹசின் தில்ருபா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானது.
இதையும் படிங்க: சினிமா பிரபலங்கள் கொண்டாடிய வண்ணமயமான ஹோலி பண்டிகை; வைரலாகும் புகைப்படங்கள்! - Cinema Celebrities Holi Celebration