சென்னை: பிரபல நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடித்து கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு துணிவு திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து அஜித் திரைப்படம் குறித்து எந்த அப்டேட்களும் வெளியாகாத நிலையில், மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தில் கமிட்டானார்.
12.07 pm
— Suresh Chandra (@SureshChandraa) August 9, 2024
ஆனால் படப்பிடிப்பும் சில நேரங்களில் தள்ளிப் போனதால், படம் கைவிடப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவிய நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனாலும் அஜித் படம் குறித்து எந்த வித தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். ஒரு பக்கம் 'விடாமுயற்சி' திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அஜித் திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் கமிட்டானார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்தது.
மேலும் வரும் 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் விடாமுயற்சி படக்குழு அமைதியாக படப்பிடிப்பு நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக விடாமுயற்சி படக்குழு அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
மேலும் அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி, 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் எனவும், தொடர்ச்சியாக 21 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது எக்ஸ் பக்கத்தில் 12.07 pm என பதிவிட்டுள்ளார். அடுத்து வரும் அப்டேட் 'விடாமுயற்சி' படத்திற்கா அல்லது 'குட் பேட் அக்லி' என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஜய் சேதுபதி இல்லை என்றால் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இழந்திருப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி! - vijay sethupathi