ETV Bharat / entertainment

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த காமெடி கூட்டணி - வெளியானது கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! - Sundar C And Vadivelu Reunite - SUNDAR C AND VADIVELU REUNITE

சுமார் 15 வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் உருவாகிவரும் 'கேங்கர்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடப்பட்டுள்ளனர்.

கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Credits - KhushbuSundar 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 1:05 PM IST

சென்னை: 1995ஆம் ஆண்டு முறை மாமன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உள்ளம் கொள்ளை போகுதே, கிரி, அன்பே சிவம், கலகலப்பு, அரண்மனை என பல வெற்றிப்படங்களை இயக்கியவர், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி, நடிகர் வடிவேலுவுடன் இணைந் நடித்த திரைப்படங்களின் காமெடிகள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இப்படியாக, தமிழ் சினிமாவில் ஒருசில கூட்டணிகள்‌ காலத்துக்கும் பேசப்படும் கூட்டணிகளாக ரசிகர்களால் கொண்டாடப்படும். அந்தவகையில், கவுண்டமணி - செந்தில் போல இயக்குநர் சுந்தர் சி - நடிகர் வடிவேலு கூட்டணியையும் ரசிகர்கள் கொண்டாடிய தவறியதில்லை.

இதுமட்டும் அல்லாது, கைப்புள்ள, வீரபாகு, நாய் சேகர் என சுந்தர் சி படத்தில் வடிவேலுவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானதும், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதும் ஆகும். ஆனால், நகரம் மறுபக்கம் படத்திற்குப் பிறகு சுந்தர் சி இயக்கிய படங்கள் எதிலும் வடிவேலு நடிக்கவில்லை.

இதையும் படிங்க: 'இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு' - பிக் பாஸ் சீசன் 8 ப்ரோமோ வெளியானது!

இருந்தபோதிலும், சுந்தர் சி - வடிவேலு கூட்டணி மீண்டும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்துகொண்டேதான் உள்ளது. இதுபோன்ற சூழலில், அரண்மனை 4 படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி தற்போது 'கேங்கர்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படம் முழுவதும் காமெடி கலந்த கதையாக இந்த படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் நடிகர் சுந்தர் சி மட்டும் அல்லாது அவருடன் இணைந்து நடிகர் வடிவேலுவும் நடிக்கிறார். ஆகவே, இந்த படத்தின் மூலம் சுமார் 15 வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி – வடிவேலு கூட்டணி இணைகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த படத்தில் சுந்தர் சி நாயகனாகவும், வடிவேலு 'கேங்கர்ஸ் சிங்காரம்' என்ற கதாப்பத்திரத்திலும் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டும் அல்லாது, இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகியோருடன் இனைந்து கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், அருள்தாஸ் என பல நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காமெடி படமான இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (செப்.12) வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.