ETV Bharat / entertainment

தீபாவளி ஸ்பெஷலாக ஒடிடியில் வெளியாகும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ! - NAYANTHARA VIGNESH SHIVAN WEDDING

Nayanthara vignesh shivan wedding documentary: விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப் படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம்
விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் (Credits - ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 9, 2024, 10:48 AM IST

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியின் திருமண வீடியோ விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ’நானும் ரௌடி தான்’ திரைப்படம் முதல் காதலிக்க தொடங்கினர்.

இதனைத்தொடர்ந்து இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மிகவும் விமர்சையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி சட்டையிலும், நயன்தாரா சிவப்பு நிற புடவையிலும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகளை ஒரு ஆவணப் படமாக வெளியிடுவதற்கான உரிமத்தை பிரபல ஒடிடி நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது. மேலும் அந்த ஆவணப் படத்தை பிரபல இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே இந்த ஆவணப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: அப்பா வொர்க் பிரஷர் தாங்காமல் உயிரிழந்தார்... மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

ஆனால் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததால் அந்த ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் அப்போது வெளியிடவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 81 நிமிடங்கள் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண ஆவணப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா திருமண வீடியோவை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.