ETV Bharat / entertainment

ஸ்ருதிஹாசன் - லோகேஷ் நடித்த 'இனிமேல்' ஆல்பம் - 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை! - inimel album song - INIMEL ALBUM SONG

Inimel Album Song: ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ் நடித்த 'இனிமேல்' ஆல்பம் பாடல், 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 3:13 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகை, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டு வலம் வருபவர், நடிகை ஸ்ருதிஹாசன். இவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு 'இனிமேல்' என்ற இசை ஆல்பத்தை இசையமைத்து நடித்துள்ளார். இவருடன் இந்த ஆல்பத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்துள்ளார். மேலும், இப்பாடலுக்கு நடிகர் கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் பாடலில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகி இருப்பது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், ஸ்ருதிஹாசனின் வடிவமைப்பில் உருவான 'இனிமேல்' ஆல்பம் பாடல், தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்த பாடல், அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 'இனிமேல்' பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும், அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் சித்தரிக்கிறது.

இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது எனலாம். அந்த வகையில், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான காதல், ஊடல், பிரிவு ஆகியவற்றை சொல்லும் பாடலாக இது உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தான், இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. இந்நிலையில், ஸ்ருதிஹாசன் அடுத்ததாக அத்வி சேஷ் நடிக்கும் 'டகாய்ட்' (Dacoit) படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே, அவரது சர்வதேசப் படமான 'தி ஐ' இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழில் தற்போது வரை நல்ல படங்கள் வரவில்லை: 'ரெட்ட தல' பட விழாவில் இயக்குநர் மோகன் ராஜா கருத்து - Retta Thala

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.