ETV Bharat / entertainment

ஜூன் 1ஆம் தேதி இசை வெளியீடு; மே 29ல் செகண்ட் சிங்கிள்.. 'இந்தியன் 2' அப்டேட்! - Indian 2 audio launch - INDIAN 2 AUDIO LAUNCH

Indian 2 audio launch date: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தியன் 2 போஸ்டர்
இந்தியன் 2 போஸ்டர் (photo credits - LYCA PRODUCATION X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 5:09 PM IST

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. மேலும், இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 உருவாகியுள்ளது. 2019இல் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தகவல் தொழில்நுட்ப கலைஞர் உயிரிழந்தது, கரோனா லாக்டவுன் என பல இடர்ப்பாடுகள் மற்றும் தடைகளை தாண்டி வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.

மேலும் இக்கதை தொடர்ச்சியின் நீளம் கருதி இந்தியன் 2, மற்றும் 3ஆம் பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகம் வெளியாகி 6 மாதங்களுக்கு பிறகு 3ஆம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தியன் 2 முதல் சிங்கிள் ‘பாரா’ கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது சிங்கிள் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் ஜூன் 1ஆம் தெதி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதியின் ஏன் ஊழல் செய்பவர்களை கொலை செய்கிறார் என திரைக்கதை அமைந்திருக்கும். தற்போது இரண்டாம் பாகத்தில் சேனாபதியின் சிறுவயது வாழ்க்கையிலிருந்து திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் முதல் பாகம் வரும் ஜூன் 1ஆம் தேதி ரீ ரிலிஸ் செய்யப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு சேனாபதியாக திரையில் தோன்றவுள்ள கமல்ஹாசனை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: ரீவைண்ட்.. கமல்ஹாசனின் இந்தியன் 1 ரீரிலீஸ் தேதி அறிவிப்பு! - Indian Movie Rerelease

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.