ETV Bharat / entertainment

"மேடை பாடல் நிகழ்ச்சிகளின் பரிமாணமே லைவ் கான்செர்ட்" - பாடகி சக்திஸ்ரீ கோபாலன் கருத்து! - Shakthisree gopalan concert - SHAKTHISREE GOPALAN CONCERT

Shakthisree gopalan: மேடைகளில் நேரடியாக மக்களைச் சந்தித்து பாடல்கள் மூலம் நாடகம் நடத்தினார்கள். இசைக் கலைஞர்கள் நேரடியாக கருவிகளை வாசித்தனர். காலத்திற்கு ஏற்ற பரிமாணமே லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி என பாடகி சக்திஸ்ரீ கோபாலன் தெரிவித்துள்ளார்.

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் புகைப்படம்
பாடகி சக்திஸ்ரீ கோபாலன் புகைப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 6:20 PM IST

கோயம்புத்தூர்: பாடகி சக்திஸ்ரீ கோபாலன் நடத்தும் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி, வருகிற 8ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்து பாடகி சக்திஸ்ரீ கோபாலன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு முறையும் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியில் பாடும் போது புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது.

பாடகி சக்திஸ்ரீ கோபாலன் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

என்னுடன் பணியாற்றும் சக பாடகர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோருடனான சந்திப்பு, பல்வேறு பழைய நினைவுகளையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. கோவை அமைதியான நகரம். அதே நேரத்தில், இசை நிகழ்ச்சிகளுக்கு உற்சாகமாக மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தால், மக்கள் ஆதரவு அதிக உள்ள நகரங்களில் கோவையும் உள்ளது.

நானும் பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். முதல் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைக்க நினைத்தபோது, முதலில் தோன்றியது கோவை தான். மேலும், லைவ் கான்செர்ட் என்பது நமது கலாச்சாரத்தின் பரிணாமம் மட்டுமே.

அந்த காலத்தில் மேடைகளில் நேரடியாக மக்களைச் சந்தித்து பாடல்கள் மூலம் நாடகம் நடத்தினார்கள். இசைக் கலைஞர்கள் நேரடியாக கருவிகளை வாசித்தனர். காலத்திற்கு ஏற்ற பரிமாணமே லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி. இதனை நாம் வேறுபடுத்தி பார்க்க தேவையில்லை.

தற்போது திறமையுள்ள பாடகர்களுக்கு பல்வேறு ஊடகங்கள் உள்ளது. அவர்களுக்குத் தேவையான ஊடகத்தை தேர்ந்தெடுத்து திறமைகளைக் காட்டி வருகின்றனர். மேலும், அவர்களுக்கென்று தனியான பாலோவர்ஸ் உள்ளனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, அதற்கு முதலில் நடிக்கத் தெரிய வேண்டும்.

தற்போது இசையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். தங்களிடம் சூப்பர் ஹீரோ கதை இருந்தால் கொடுங்கள் நடிக்கிறேன். பாடல்களின் மேக்கிங் வீடியோக்களில் நடிக்கிறோம். அதுவும் நல்ல அனுபவமாக உள்ளது” எனக் கூறிய அவர், இதனிடையே நெஞ்சுக்குள்ள முடிஞ்சு இருக்க, வாயா என் வீரா, ஆகிய பாடல்களைப் பாடினார்.

இதையும் படிங்க: "மகள் இறந்ததால் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை" - இளையராஜா பேச்சு! - Ilayaraja Birthday

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.