ஹைதராபாத்: பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் புது தில்லியில் 1989ஆம் ஆண்டு நவம்ர் 2ஆம் தேதி பிறந்தார். இவரது நடிப்பு பயணமானது ஃபௌஜி என்ற தொலைக்காட்சி தொடரில் இருந்து துவங்கியதாகும். அந்த தொடரில் அவர் இளம் ராணுவ வீரராக நடித்திருப்பார். இதையடுத்து அவர் 'தீவானா', 'டார்' மற்றும் 'பாசிகர்' போன்ற படங்கள் மூலம் திரை உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். இந்த படங்கள் ஷாருக்கானுக்கு வெற்றி கொடுத்தாலும் அப்போது பெரிய அளவில் அவருக்கு ரசிகர்கள் கூட்டமும், வரவேற்பும் இல்லை எனலாம்.
ஷாருக்கான் அனைவரையும் அவர் வசம் இழுத்த திரைப்படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' என்ற படமாகும். அந்த படம் ஷாருக்கானை ஒரு சூப்பர் ஸ்டாராக மக்கள் முன் நிலைநிறுத்தியது. கால போக்கில் அவரது படங்கள் வெளியாவது அபூர்வமாக இருந்த சூழலிலும் மிக பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படங்கள் பதான் மற்றும் ஜவான். இந்நிலையில் அவரது 59 ஆவது பிரந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது ரசிகளும், திரைபிரபலங்களும் ஷாருக்கானுக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஷாருக்கான் பிறந்த நாள் கொண்டாட்டத்தை வலிவுறுத்தும் வகையில் 'தீ அகாடமி' தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கபி குஷி கபி காம் (K3G) என்ற படத்தில் இருக்கும் ஷாருக்கானின் ஐக்கானிக் என்ட்ரி காட்சியை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. ஒரே நாளில் ரூ.50 கோடியை நெருங்கிய வசூல்!
காட்சி கூறுவது என்ன? இந்த காட்சியில் ராய்சந்த் மாளிகையில் ஒரு பிரம்மாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தில் ஜெயா பச்சன் நடித்த நந்தினி ராய்சந்த் என்ற கதாபாத்திரம் தனது மகன் வருகை புரிந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியபடி வாசலுக்கு ஆராத்தி தட்டுடன் வருகிறார். இதை கவனித்த தந்தை அமிதாப் பச்சன் மணீஷ் மல்ஹோத்ராவும் மகனின் வருகை இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் மனைவி எடுத்து செல்லும் ஆரத்தியில் தனது கவனத்தை வைக்கிறார். மறுபுறம் ஷாருக் கறுப்பு நிற ஹெலிகாப்டரில் வீட்டுக்கு வந்து இறங்கி தாயை காண ஓடி வருகிறார்.
ஜெயா நுழைவாயிலை நோக்கி நடக்கையில், மகன் வந்திருக்க மாட்டானா? என ஏக்கத்தில் கண் கலங்குகிறார். அப்போது ஷாருக் தாயை ஆர்ச்சியமூட்டும் வகையில் முன் வந்து நிற்கிறார். இதை பார்த்த தாய் ஒளிரும் புன்னகையுடன் வரவேற்கிறார். அப்போது ஷாருக் "அம்மா, ஒவ்வொரு முறையும் நான் வருவதற்கு முன்னேற எப்படி நான் வரபோவதை உணர்கிறீர்கள்?" அப்போது ஜெயா ஷாருக் நெற்றியில் ஒரு திலகம் பூசி புன்னகையிக்கிறார்”. இந்த காட்சியை பதிவிட்ட அகாடமி கீழே "ஒரு தாயின் உள்ளுணர்வு எப்போதும் சரியானது" என தலைப்பிட்டிருக்கின்றனர். இந்த பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களையும், விவாதங்களையும் எழுப்பி வருகிறார்.
இந்த பதிவிற்கு கீழ் கபி குஷி கபி கம் படத்தை இயக்கிய கரண் ஜோஹர், “இந்தப் பதிவு என்னைப் சிரிக்க வைத்துள்ளது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வகையில் பதிலளித்திருந்தார். கரண் ஜோஹர் தற்போது Netflix க்காக ஒரு கிரைம் வெப் தொடரை இயக்கி வரும் நிலையில், அதில் ஷாருக்கான் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வெப் தொடர் 2026 ஈகைத் திருநாள் அன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இணைவாசி ஒருவர் தி அகடமியின் பதிவுக்கு கீழ், “ ஷாருக்கானின் சிறந்த பதிவுகளில் ஒன்று இந்த படம். இந்தக் காட்சி மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஷாருக் காதல் மன்னன்” என பதிவிட்டிருந்தார்.
K3G படம்: இந்த காட்சி இடம் பெற்றிருந்த படம் கபி குஷி கபி காம் (K3G) 2001ஆம் ஆண்டு வெளியானது. இதில் கஜோல், ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர் மற்றும் ராணி முகர்ஜி என நட்சத்திர பட்டாளமே நிறைந்த படமாகும்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்