ETV Bharat / entertainment

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'சொர்க்கவாசல்' படத்தின் டீசர் வெளியீடு! - SORGAVASAL TEASER

Sorgavasal Teaser: சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சொர்க்கவாசல் திரைப்பட போஸ்டர்
சொர்க்கவாசல் திரைப்பட போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 22, 2024, 12:40 PM IST

சென்னை: ஆர்ஜேவாக இருந்து திரையுலகில் நுழைந்து தற்போது முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக மாறியுள்ளவர் ஆர்ஜே பாலாஜி. முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் நானும் ரௌடி தான், காற்று வெளியிடை ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, எல்.கே.ஜி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரமெடுத்தார்.

அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கப்வனம் பெற்றார். அதில் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள 'சொர்க்கவாசல்' என்ற புதிய படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். சிறைக் கைதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனை பற்றிய படமாக இருக்கும் என்றும், சென்னை மத்திய சிறையில் 1990களில் நடந்த உண்மையை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 'அமரன்' பட டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை மத்திய சிறையில் 1990களில் நடந்த கலவர சம்பவத்தில் பல கைதிகள் சிறையை விட்டு தப்பித்ததாக கூறப்படுகிறது. டீசரில் சிறையில் பல்வேறு விதமான கைதிகள் இருப்பது காட்டப்படுகிறது. போலீசான கருணாஸ் குரலில் டீசர் தொடங்குகிறது. ஆர்ஜே பாலாஜியும் இப்படத்தில் சிறைக் கைதியாக நடித்துள்ளார். டீசரின் எடிட்டிங், கிராஃபிக்ஸ் காட்சிகள் மற்றும் இசை ஆகியவை படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.