சென்னை: ராஷ்மிகா நடித்துள்ள 'தி கேர்ள் பிரெண்ட்' (The Girlfriend) படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட மொழியில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு மொழியில் கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்கள் மனதி இடம் பிடித்தார். பின்னர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் 'டியர் கொம்ராட்' படத்தில் நடித்து பிரபலமானார்.
இதனைத்தொடர்ந்து தெலுங்கில் புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். மேலும் தமிழில் விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்தார். தென்னிந்தியா அளவில் பெரிய நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சமீபத்thiல் வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி வருகிறது. புஷ்பா 2 திரைப்படத்திலும் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்நிலையில் ராகுல் ரவிந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'தி கேர்ள் பிரெண்ட்' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரின் தெலுங்கு வெர்ஷனை நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். மேலும் அவரது குரலில் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டரை விவரிக்கிறார்.
அதேபோல் 'தி கேர்ள் பிரெண்ட்' திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ் டீசரில் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் பின்னணி குரல் அளித்துள்ளது போல் தெரிகிறது. ராகுல் ரவீந்திரன் சமீபத்தில் ஆலியா பட நடிப்பில் வெளியான ’ஜிக்ரா’ (jigra) படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹெஷம் வஹாப் இசையமைத்துள்ளார். அவர் முன்னதாக ஹிருதயம், குஷி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்துடன் நடிக்கும் அமீர்கான்?... ஜெய்ப்பூரில் 'கூலி' படப்பிடிப்பு தொடக்கம்!
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.