ETV Bharat / entertainment

மதுரையில் ரஜினிக்கு கோயில்.. 300 கிலோவில் சிலையை பிரதிஷ்டை செய்த தீவிர ரசிகர்..!

Rajinikanth 74th birthday: திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட கதாபாத்திரத்திர வடிவில் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மதுரையில் ரஜினிக்கு கோயில் கட்டி சிலை திறந்த ரசிகர்
மதுரையில் ரஜினிக்கு கோயில் கட்டி சிலை திறந்த ரசிகர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

மதுரை: திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் மீது கொண்டுள்ள அபிமானத்தில் 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்' ஒன்றை உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.

இந்திய ராணுவத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கார்த்திக், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அஞ்சலகம் ஒன்றில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தனது தந்தை சிவன் வழியில் ரஜினியின் தீவிர ரசிகராக உள்ளார். இந்த நிலையில், தற்போது மேட்ரிமோனி இணையதளம் ஒன்றை நடத்தி வரும் கார்த்திக், அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து ரஜினிக்கு கோயில் கட்டியுள்ளார்.

அண்மையில் நவராத்திரி விழாவின் போது முன்னிட்டு ரஜினி இதுவரை நடித்த திரைப்பட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு அமைத்திருந்தார். இக்கோயிலில் ஒவ்வொரு நாள் காலையும், மாலையும் பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் நாளை (டிச.12) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயிலில் இதுவரை இருந்த ரஜினி சிலைக்கு மாற்றாக மாப்பிள்ளை படத்தின் கதாபாத்திரத்தை மாடலாகக் கொண்ட புதிய உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மதுரையில் ரஜினிக்கு கோயில் கட்டி சிலை திறந்த ரசிகர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து திருக்கோயில் நிறுவனரும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர அபிமானியமான கார்த்திக் கூறுகையில், ”கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ரஜினியின் உருவச் சிலையை வைத்து வழிபட்டு வருகிறோம். குறிப்பிட்ட சிலை ரஜினியின் உருவ அமைப்பில் 50 விழுக்காடு மட்டுமே பொருந்தி வந்த காரணத்தால், அவரது 74வது பிறந்தநாளையொட்டி ’மாப்பிள்ளை’ திரைப்படத்தின் ரஜினி கதாபாத்திரத்தின் அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய சிலை 250 கிலோ எடையும், 3 அடி உயரமும் கொண்டதாகும். தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும். பழைய சிலை மூலவராகவும், தற்போதைய சிலை உற்சவராகவும் ரஜினி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட சிலையை செய்வதற்கு மிகக் கடுமையாக சிரமப்பட்டோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இதற்காக முயற்சி மேற்கொண்டோம்.

விருதுநகரில் இந்த சிலையை ஒரு ஸ்தபதி எங்களுக்கு செய்து கொடுத்தார். கடந்த ஆறு மாதங்களாக இந்த சிலையை உருவாக்க நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரூ.70 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. ரஜினிகாந்தை எங்களது குலசாமியாக குடும்பத்தார் தனிப்பட்ட முறையில் நாங்கள் வழிபட்டு வருகிறோம். ஆகையால் இதற்கு விளம்பரம் தேவையில்லை. ரஜினிகாந்த் பிறந்தநாள், அவரது திருமண நாள் என அனைத்து நாட்களையும் நாங்கள் இங்கே கொண்டாடி வருகிறோம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நவராத்திரியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த 170 திரைப்படங்களில் இருந்து அவரது கதாபாத்திரங்களை கொண்ட பொம்மைகள் உருவாக்கி இந்த கோயிலில் கொலு நடத்தினோம். அச்சமயம் ரஜினிகாந்த் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த காரணத்தால் அவர் நலம் பெற வேண்டி இந்த கொலுவை நாங்கள் அமைத்தோம்.

எங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது அவரை சந்தித்து, காலில் விழுந்து, எனது குடும்பத்தாருடன் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். கடந்த நூறு நாட்களுக்கு முன்பாக ரஜினிகாந்தின் உதவியாளர் எங்களை தொடர்பு கொண்டு எங்களது முகவரியை கேட்டிருக்கிறார். ஆகையால் அவர் கண்டிப்பாக எங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் எங்களை சந்திப்பார் என்ற பலனை எதிர்பார்த்து கடமையை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: "வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறும் பரப்ப மாட்டேன்" - சிங்கமுத்து உத்தரவாதம்

கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் எம்.இ., பயிலும் கார்த்திக்கின் மகள் அனுஷா கூறுகையில், "எனது அப்பா வழியில் நானும் சிறுவயதிலிருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக உள்ளேன். எல்லோரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார்கள். நான் அவருக்கு வித்தியாசமாக அவரது 74வது பிறந்த நாளை முன்னிட்டு 74 மொழிகளில் வாழ்த்து எழுதி அனுப்பியுள்ளேன்" என்றார்.

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.