சென்னை: நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில், அவரின் அறக்கட்டளை மூலம் படித்த மாணவர்களுடன் இணைந்து ‘மாற்றம்’ என்ற சேவை அமைப்பை சமீபத்தில் ராகவா லாரன்ஸ் தொடங்கினார்.
இந்த மாற்றம் சேவை அமைப்பில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அறந்தாங்கி நிஷா, செஃப் வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த மாற்றம் சேவை அமைப்பு மூலம், விவசாயிகளுக்கு உதவி செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மாற்றம் சேவை அமைப்பு ஆரம்பித்த முதல் நாளில் விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கினார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், மாற்றம் சேவை அமைப்பு தொடர்பாக பேசிய ஆடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர். நீங்கள் பல வருடங்களாக ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள்.
தற்போது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக மாற்றம் அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யனும். அதற்கு அந்த ஆண்டவன் அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும், வாழ்த்துக்கள்" என கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "கட்டிட வேலை செய்பவர்களுக்கா வீடு சொந்தம்?" - இளையராஜாவை சாடிய தயாரிப்பாளர் கே.ராஜன்! - K RAJAN ABOUT ILAYARAJA