சென்னை: அறிமுக நாயகன் தருண் - அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் "குற்றம் புதிது" படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கின்றனர்,
தமிழ் சினிமாவில் தரமான சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாவது குறைவாகவே காணப்படுகிறது. அப்படி படங்கள் வந்தாலும் திரையரங்குகள் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனாலும், சினிமா மேல் உள்ள காதலால் சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.
அப்படி அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த குற்றம் புதிது படத்தில், காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார் மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கின்றனர்.
ரஜித், கிரிஷ் பாடல் வரி எழுத, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார். கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.
இந்த படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இம்மாதம் 23ஆம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பை ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ், சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது... ரசிகர்கள் அதிர்ச்சி! - GV PRAKASH SAINDHAVI