ETV Bharat / entertainment

நடிகர் பிரபாஸ் பிறந்தநாள்: 'ராஜாசாப்' படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியீடு! - PRABHAS BIRTHDAY

ACTOR PRABHAS BIRTHDAY: நடிகர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜாசாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ராஜாசாப் திரைப்பட போஸ்டர்
ராஜாசாப் திரைப்பட போஸ்டர் (Credits - Film poster)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 23, 2024, 3:02 PM IST

சென்னை: நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ராஜாசாப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ திரைப்படம் உலக அளவில் மெகா ஹிட்டானது. பாகுபலி இந்திய அளவில் 1000 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

இந்த படத்தில் பிரபாஸ், ராணா டக்குபத்தி, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என அனைவரது கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலமடைந்தது. இந்த படம் மூலம் பிரபாஸ் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நட்சத்திர அந்தஸ்தை எட்டினார். பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத்தொடர்ந்து கேஜிஎஃப் புகழ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து நாக் அஷ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 AD' என்ற பீரியட் ஃபேண்டஸி படத்தில் நடித்தார். இத்திரைப்படம் உலக அளவில் 1100 கோடி வசூல் செய்து இமாலய சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது இயக்குநர் மாருதி இயக்கத்தில் தற்போது ‘ராஜாசாப்’ (Raja saab) என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று பிரபாஸ் 45வது பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜாசாப் மோஷன் போஸ்டரில் பிரபாஸ் சிம்மாசனத்தில் ராஜா கெட்டப்பில் உள்ளார்.

இதையும் படிங்க: ’சூரரைப் போற்று’ திரைப்படம் முன்பு எனக்கு சோதனையான காலகட்டம்... மனம் திறந்த சூர்யா!

இதனைத்தொடர்ந்து 'Horror is the new humour' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ராஜாசாப் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனையடுத்து பிரபாஸ் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.