ETV Bharat / entertainment

நெல்லையப்பர் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம்! - ILAIYARAAJA

இசைக் கச்சேரிக்காக திருநெல்வேலி வந்த இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி நெல்லையப்பர் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

இளையராஜா சாமி தரிசனம் செய்ய வந்த காட்சி
இளையராஜா சாமி தரிசனம் செய்ய வந்த காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2025, 1:04 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று (ஜனவரி 17) வருகை தந்த இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

முன்னதாக கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காந்திமதி அம்பாள் சன்னதி, சுவாமி நெல்லையப்பர் சன்னதி மற்றும் பல்வேறு பகுதிகளில் சுவாமி தரிசனம் செய்த இளையராஜா, தொடர்ந்து சிவபெருமான் திரு நடனமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபையை சுற்றி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

அதற்காக, நெல்லையப்பர் கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்கிடையே, கோயிலில் இருந்த பக்தர்களும், பொதுமக்களும் இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால், நெல்லையப்பர் கோயிலில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க: "கோயிலைப் போலவே ஒரு ஊருக்கு பள்ளியும் அவசியம்" - நடிகர் சசிகுமார்

மேலும், இன்று மாலை சிவந்திபட்டி அருகே நடைபெறும் பிரம்மாண்ட இசைக் கச்சேரியில் இளையராஜா கலந்து கொள்கிறார். முழுக்க முழுக்க தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பார் என தெரிகிறது.

இதற்கான டிக்கெட் விற்பனை சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இசைக் கச்சேரியை முன்னிட்டு இளையராஜா ஒரு நாள் முன்னதாக நேற்று மாலை நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். இந்த நிலையில், இன்று இளையராஜா பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.