ETV Bharat / entertainment

குணா ரீ-ரிலீஸ்க்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! - GUNA RE RELEASE

GUNA: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தை மறுவெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 8:12 PM IST

சென்னை உயர்நீதிமன்றம், குணா போஸ்டர்
சென்னை உயர்நீதிமன்றம், குணா போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மலையாள சினிமாவில் சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியானது. அந்த படமானது குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும் என்பதால், நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஜூன் 21ஆம் தேதி குணா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாகக் கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் குணா படத்தை மறுவெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "படத்தின் முழு உரிமைதாரராக என்னை அறிவிக்க வேண்டும். படத்தை மறுவெளியீடு செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை தெரிவித்து அத்தொகையை எனக்கு வழங்கும்படி பிரமிட் மற்றும் எவர்க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து, இந்த மனுவுக்கு ஜூலை 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: "சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை".. தங்கலான் ட்ரெய்லர் வெளியானது! - THANGALAAN TRAILER

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.