ETV Bharat / entertainment

”தமிழ்நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவது சீரியஸான விஷயம்”... 'லப்பர் பந்து' நாயகி சுவாசிகா! - Lubber pandhu actress swasika - LUBBER PANDHU ACTRESS SWASIKA

Lubber pandhu actress Swasika: கேரளாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது பெரிய விஷயம் இல்லை என்றும், லப்பர் பந்து திரைப்படம் வெளியான பிறகு மாட்டுக்கறி சாப்பிடுவது தமிழ்நாட்டில் சீரியஸாக பார்க்கப்படுகிறது என தெரிந்தது என லப்பர் பந்து நடிகை சுவாசிகா கூறியுள்ளார்.

நடிகை சுவாசிகா
நடிகை சுவாசிகா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 11:41 AM IST

சென்னை: அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் 'லப்பர் பந்து'. கடந்த வாரம் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் என அனைவரது நடிப்பும் பேசப்பட்டு வரும் நிலையில், யசோதாவாக நடித்த சுவாசிகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. டிவி தொகுப்பாளருமான சுவாசிகா, தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார்.

லப்பர் பந்து படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய சுவாசிகா, "லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வெற்றியால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுபோல ஒரு வெற்றிக்கு தான் நான் காத்திருந்தேன். படக்குழு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடவுள் இப்போது எல்லாம் அமைந்த ஒரு படத்தை கொடுத்துள்ளார்.‌ இந்த வெற்றியை நாங்கள் அனைவரும் கொண்டாடி வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் படத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் பேசுகிறார்கள், நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

கடந்த சில வருடங்களாக மலையாளப் படங்களில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் நான் நடித்த படம் மாநில விருது பெற்றது. அதன் வீடியோவைப் பார்த்து தான் லப்பர் பந்து இயக்குநர் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்தில் நான் நடிக்க காரணம் கதாபாத்திரம் தான், வயது இரண்டாவது விஷயம் தான். இப்படத்தின் கதாபாத்திரம் எனக்குப் பிடித்து இருந்தது. யசோதா கதாபாத்திரம் பேசும் வசனங்களில் உள்ள அழுத்தம் கதை சொல்லும் போதே தெரிந்தது. நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்பதால் ஒப்புக் கொண்டேன்.

இந்த கதாபாத்திரத்தை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்று முதலில் கொஞ்சம் பதற்றம் இருந்தது. ஆனால், இயக்குநர் தான், நீங்கள் நடியுங்கள் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறினார். இப்படத்திற்காக டிராக்டர் ஓட்டவும், கறி வெட்டவும் பயிற்சி எடுத்தேன். அனைவரும் அளித்த ஒத்துழைப்பால் எனக்கு இந்த கதாபாத்திரம் நடிக்க சுலபமாக இருந்தது.

இதையும் படிங்க: ”பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் சாதி அரசியலை சரியாக பேசுகின்றனர்” - 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து - Lubber pandhu director

படத்தில் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. கேரளாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது பெரிய விஷயம் இல்லை, ’லப்பர் பந்து’ படம் வெளியான பிறகு தான் மாட்டுக் கறி சாப்பிடுவது தமிழ்நாட்டில் சீரியஸாக பார்க்கப்படுகிறது என தெரிந்து கொண்டேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.