ETV Bharat / entertainment

D.I.S.C.O.. தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுவா? - லோகேஷ் வைத்த லாக்! - Thalaivar 171 title teaser - THALAIVAR 171 TITLE TEASER

Thalaivar 171: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 7:44 PM IST

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் 'தலைவர் 171'. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ், கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “D.I.S.C.O" என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு இருப்பவர்.

அவர் இயக்கும் படங்கள் அனைத்தும் இரவில் படமாக்கப்பட்டவை. அதோடு மட்டுமின்றி, தனக்கென தனி யுனிவர்சை உருவாக்கி உள்ளார். முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்கள் LCU-வில் கனெக்ட் ஆகி இருக்கும் நிலையில், 'தலைவர் 171' படமானது LCU-வில் வருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த், த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 'தலைவர் 171' படத்தில் நடிகர் ரன்வீர்சிங், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்ற தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய ரசிகர்கள் பார்க்காத ஒன்று ‘கோட்’ படத்தில் உள்ளது.. இயக்குநர் வெங்கட் பிரபு மாஸ்கோவில் பேட்டி! - Venkat Prabhu About GOAT

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.