சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க மூத்த உறுப்பினரும், பழம்பெரும் நாடக நடிகருமான ஆர்.கோபால கிருஷ்ணன் (76) நேற்று காலமானார். அவரது உடலுக்கு இன்று (13.05.24) தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், நியமன செயற்குழு உறுப்பினர் அனந்த நாராயணன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார். மறைந்த ஆர்.கோபால கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நடிகர் சங்கம் சார்பில் ரூபாய் பத்தாயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: "பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படிக்காத பக்கங்கள்" - படக்குழுவினர் கூறுவது என்ன? - Padikkatha Pakkangal