சென்னை: 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் மெய்யழகன். இப்படத்தை நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர். முன்னதாக, படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
A breezy journey filled with celebratory moments await 🎇
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 17, 2024
Can’t wait for you all to witness the rooted emotions on Sep 27#MeiyazhaganFromSep27#Meiyazhagan@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl #Jyotika @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash… pic.twitter.com/VMwBzRDf8V
அந்த எதிர்பார்ப்பை போக்கும் விதமாக, படக்குழு ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டரை இன்று (ஜூலை 17) வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், கார்த்தி கோயிலுக்கு மாலை அணிந்திருப்பது போன்றும், வாடிவாசலில் காளை இருப்பது போன்றும், படமானது செப் 27ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், வித்தியாசமாக படக்குழு புரட்டாசி 11 என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தொடர்ந்து படக்குழு காளைகள் அடங்கிய போஸ்டரை வெளியிடுவதால் படமானது ஜல்லிக்கட்டு கதையை மையப்படுத்தி இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, நடிகர் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது கார்த்திக் தனது 26 மற்றும் 27வது படத்தில் நடித்து வருகிறார். 26வது படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குகிறார். இப்படத்திற்கு வா வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘மினிக்கி மினிக்கி மேனா மினிக்கி..’ தங்கலான் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! - Thangalaan First single out