ஹைதராபாத்: பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவரது தனது நடிப்புத் திறமையால், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், இமாச்சலப்பிரதேசம், மாண்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்று பாஜக எம்பியாக தேர்வாகி உள்ளார் கங்கனா ரனாவத்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் இயக்கி நடித்த எமர்ஜென்சி படம் விரைவில் வெளியாகும் எனவும், தனது பாதுகாப்பை நம்பிச் சென்ற ஒரு வயதான பெண்மணி எப்படி கொல்லப்பட்டார் என்பதைக் காட்டும் படமாகவும் எமர்ஜென்சி படம் இருக்கும் என அதில் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக, சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த கங்கனா ரனாவத்தை பாதுகாப்புப் பணியிலிருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் அவரது கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மேஜர் ஆர்யா பதிவிட்ட ட்வீட்டுக்கு கங்கனா பதிலளித்தார். அது என்னவென்றால், இந்தச் சம்பவம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் விமான நிலையத்தில் அந்த சிஐஎஸ்எஃப் படை வீரரைக் கடக்கும் வரை காத்திருந்து காலிஸ்தாணி பாணியில், எந்த வார்த்தையும் பேசாமல் என் பின்னே வந்து என் முகத்தில் அடித்தாள்.
எதற்கு என்னை அடித்தீர்கள் என்று கேட்டபோது, அவள் மக்கள் கவனத்தை ஈர்ப்பதாக அங்கிருந்த செல்போன்கள் மற்றும் கேமரா முன்பு பேசத் தொடங்கினார். கான்ஸ்டபிளின் இந்த செயல்கள் பஞ்சாப்பில் குறிப்பிடத்தக்க அரசியல் ஈர்ப்பை பெற்று வரும் காலிஸ்தாணி குழுவில் சேர ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரலட்சுமி - நிகோலய் சச்தே திருமணம்; ரஜினிக்கு சரத்குமார் நேரில் அழைப்பு! - Varalaxmi Sarathkumar Wedding