ETV Bharat / entertainment

மஞ்சும்மல் பாய்ஸ் வைப்.. குணா ரீ-ரிலீஸ் - எப்போது தெரியுமா? - Guna Movie Rerelease - GUNA MOVIE RERELEASE

GUNA MOVIE RE-RELEASE: சந்தான பாரதி இயக்கத்தில் 33 ஆண்டுகளுக்கு முன் கமல் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.

குணா திரைப்படம் போஸ்டர்
குணா திரைப்படம் போஸ்டர் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 5:31 PM IST

Updated : Jun 13, 2024, 7:00 PM IST

சென்னை: சந்தான பாரதி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் குணா படத்தின் வசனங்களையும், பாடல்களையும் தலைமுறைகள் கடந்து பெரிதும் ரசிக்கப்பட்டுக் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் மலையாள மொழியில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியது. மேலும், மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்தியது மஞ்சும்மல் பாய்ஸ்.

இதற்கான அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் சரியாக பயன்படுத்தி நாஸ்டால்ஜி தருணங்களை உருவாக்கியதே எனலாம். குணா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது கூட திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் வெளியான ரஜினிகாந்த்தின் தளபதி திரைப்படம் சக்கை போடு போட்டது.

குணா படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார், பாலகுமாரன் வசனம் எழுதியுள்ளார், வேணு ஒளிப்பதிவு செய்துள்ளார், மேலும், இந்த படத்தில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி , கிரீஷ் கர்னாட், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காக்கா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து என நட்சத்திர நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

வாலி எழுதிய பாடல்களை கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும், 1991ஆம் ஆண்டு தமிழில் வெளியான நேரடி திரைப்படங்களில் குணா திரைப்படம் மூன்றாவது சிறந்த திரைப்படமாக தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்து பரிசு தந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றிலும் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வருகிறது. இந்நிலையில், எப்போது குணா படம் ரீரிலீஸாகும் என பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஜூன் 21ஆம் தேதி முன்னணி நிறுவனமான பிரமிட் ஆடியோ குரூப் "குணா" படத்தை உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளது.

இதையும் படிங்க: எலான் மஸ்க் பகிர்வால் டிரெண்டான தப்பாட்டம் போஸ்டர்.. நாயகன் கூறுவது என்ன?

Last Updated : Jun 13, 2024, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.