ஹைதராபாத்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இணையின் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத்தை முன்னிட்டு, கடந்த மூன்று மாதங்களாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் திருமண வீட்டார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் பாடுவதற்காக பிரபல கனடியன் பாப் சிங்கர் ஜஸ்டின் பைபர் பிங்க் நிற டிசர்ட் மற்றும் சிவப்பு நிற தொப்பி அணிந்தவாறு மும்பை விமான நிலையம் வந்தார். அதிகாரிகள் பாதுகாப்புடன் அவரை காரில் அழைத்துச் சென்றனர். ஜஸ்டின் பைபர் Sorry, Never Say Never போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண நிகழ்வில் பாடுவதற்காக ஜஸ்டின் பைபருக்கு ரூ.83 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, ப்ரீ வெட்டிங் பார்ட்டியில் பாடிய ரிஹானாவுக்கு ரூ.65-75 கோடி வரை சம்பளம் வழங்கியதாக கூறப்பட்டது.
முன்னதாக, அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இணையின் திருமணத்திற்கு முன்பாக சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி - நீடா அம்பானி இலவசமாக திருமணம் நடத்தி வைத்தனர். மேலும், மாமன் வீட்டு சீர் என பல கொண்டாட்டங்களில் திருமண வீட்டார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குபேரா மழை கொட்டிடுச்சு.. ராஷ்மிகா மந்தனா பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது! - KUBERA RASHMIKA FIRST LOOk VIDEO