ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் கொண்டா சுரேகா பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தெலுங்கானா வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெற்றதற்கு பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கேடிராமராவ் தான் காரணம் என கூறினார்.
இவ்வாறு பேசியதற்கு சமந்தா, நாகார்ஜுனா, அமலா அக்கினேனி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இன்று அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “எனது கருத்து சமந்தா மற்றும் அவரது ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால், உடனடியாக திரும்ப பெற்று கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலுங்கு சினிமாத் துறையில் பூதாகரமாக வெடித்துள்ளது.
Konda Surekha garu, dragging personal lives into politics is a new low. Public figures, especially those in responsible positions like you, must maintain dignity and respect for privacy. It’s disheartening to see baseless statements thrown around carelessly, especially about the…
— Jr NTR (@tarak9999) October 2, 2024
அமைச்சர் கொண்டா சுரேகாவிற்கு ஜுனியர் என்டிஆர், சீரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் தனது சமூக வலைதள பக்கத்தில், “அமைச்சர் கொண்டா சுரேகா, ஒருவரின் சொந்த வாழ்க்கையை அரசியலில் இழுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களை போன்ற மதிக்கத்தக்க பதிவியில் இருப்பவர்கள் கண்ணியத்தையும், மரியாதையையும் கடைபிடிக்க வேண்டும்.
Disgusting to see politicians thinking that they can get away talking any kind of nonsense. When your words can be so irresponsible it’s stupid of us to expect that you will have any responsibility for your people. It’s not just about actors or cinema. This is not abt any…
— Nani (@NameisNani) October 2, 2024
எங்களை பற்றி இது போன்ற தவறான குற்றச்சாட்டை கூறும் போது அமைதியாக இருக்கமாட்டோம். ஜனநாயக இந்தியாவில் இது போன்று நடந்து கொள்வதை சமூகம் இயல்பாக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதே போன்று நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “மதிப்பிற்குரிய அமைச்சர் இதுபோன்ற இழிவான கருத்து தெரிவித்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
இதையும் படிங்க: வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை மறுப்பு! - vettaiyan movie case
மக்களிடம் கவனம் பெற வேண்டும் என்பதற்காக திரையுலகினரை எளிதான இலக்காக கருதி தாக்குவது தவறானது. இது போன்ற தவறான பேச்சுகளுக்கு எதிராக திரையுலகினர் ஒன்று திரண்டு ஒற்றுமையாக நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பிரபல நடிகர்கள் நானி, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அமைச்சர் கொண்டா சுரேகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்