ETV Bharat / entertainment

நடிகை ஸ்ரீ தேவி மகளா இது! தேவரா படம் குறித்து தமிழில் பேசி அசத்திய ஜான்வி! - Janhvi Kapoor in tamil - JANHVI KAPOOR IN TAMIL

Janhvi Kapoor in Tamil about Devara Movie: சென்னை என்றாலே அம்மாவுடன் இருந்த பல நியாபகங்கள் வரும், அம்மாவை போல் கடினமான உழைப்பேன் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நடிகை ஜான்வி தேவரா படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூறியுள்ளார்.

நடிகை ஜான்வி கபூர், தேவரா பட போஸ்டர்
நடிகை ஜான்வி கபூர், தேவரா பட போஸ்டர் (Credits- ETV Bharat Tamil Nadu/ junior NTR 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 11:08 PM IST

சென்னை: கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பயம் என்ற விஷயத்தை வேறொரு கோணத்தில் இயக்குனர் சிவா இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். தெலுங்கில் எனக்கு இது நான்காவது படம். இது ஒரு புது உலகமாக பார்வையாளர்களுக்கு இருக்கும். படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே எவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

இந்த உழைப்பை எல்லோரும் விரும்பியே கொடுத்திருக்கிறார்கள். படம் நிச்சயம் பேசப்படும் என்ற நம்பிக்கை இசையமைப்பாளராக எனக்கு இருக்கிறது. அமெரிக்காவில் முந்திய விற்பனையிலேயே படம் நல்ல கலெக்‌ஷன் பெற்றிருப்பதாக கேள்விப்பட்டேன். அதே வெற்றி தெலங்கானாவில் மட்டுமல்லாது, தமிழிலும் மற்ற மொழிகளிலும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமாகும் ஜான்விக்கும் வாழ்த்துக்கள் என்று பேசினார்.

இதையும் படிங்க: "நிச்சயமா வாழை 2 வரும்.. அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு" - மாரி செல்வராஜ் டுவிஸ்ட்!

இதையடுத்து பேசிய நடிகை ஜான்வி, “ சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் இருந்த பல நியாபகங்கள் வரும். அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அம்மா அளவுக்கு கடினமான உழைப்பையும் கொடுப்பேன். ‘தேவரா’ எனக்கு ஸ்பெஷலான படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.