ETV Bharat / entertainment

ஜூன் மாதம் வெளியாகும் இந்தியன் 2.. படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி! - Indian 2 release date - INDIAN 2 RELEASE DATE

Indian 2 release date: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் வெளியாகும் இந்தியன் 2
ஜூன் மாதம் வெளியாகும் இந்தியன் 2
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 8:04 PM IST

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதன்முறையாக இசையமைப்பாளராக ஷங்கருடன் அனிருத் கைகோர்த்துள்ளார்.

இந்தியன் 2 திரைப்படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியன் 2 படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய காட்சிகளுக்கான ஃகிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வடசென்னையில் உள்ள கட்டிடங்களில் பிரமாண்டமான இந்தியன் தாத்தா ஓவியங்கள் வரையப்பட்டுப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. கரோனா லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் தொழில்நுட்ப கலைஞர் உயிரிழந்தது என பல்வேறு இடையூறுகளைக் கடந்து இப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்தியன் 2 திரைப்படம் இந்தாண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தற்போது பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்குப் பிறகு மீண்டும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் கமல் கலந்து கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த ஆடு ஜீவிதம்! வசூலி மஞ்சுமெல் பாய்சை பின்னுக்குத் தள்ளி சாதனை! - The Goat Life Movie Cross 100 Crore

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.