ETV Bharat / entertainment

சென்னையில் இளையராஜா இசைக் கச்சேரி.. எப்போது? டிக்கெட் விலை என்ன? முழு விவரம்! - ilaiyaraaja live concert in chennai

Ilaiyaraaja live concert in chennai: சென்னையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இளையராஜா இசைக் கச்சேரிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட் புகைப்படம்
இளையராஜா இசைக் கச்சேரிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 10:39 PM IST

சென்னை: அருண் ஈவன்ட்ஸ் - மெர்க்குரி நிறுவனத்தின் சார்பில், இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில், 'Truly live in concert' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி வரும் ஜூலை 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வரக்கூடும் என்பதால், நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழாவில், நிகழ்ச்சியை நடத்தும் அருண் ஈவன்ட்ஸ் அமைப்பின் தலைவர் அருண் விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஜூன் மாதம் நடைபெற உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் Bronze, Silver, Gold, VIP, VVIP வரிசையில் டிக்கெட்டுகள் வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், டிக்கெட் கட்டணம் ரூ.1,000 முதல் ரூ.3,000, ரூ.6,000, ரூ.10,000 என ரூ.25,000 வரையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் 55 முதல் 60 பாடல்களை இளையராஜா பாட இருக்கிறார்" என்றும் கூறினார்.

மேலும், ஜூன் 14ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு சரியாக நிகழ்ச்சி துவங்கும் நிலையில், 3 மணி முதல் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ரசிகர்களுக்கு கார் பார்க்கிங் செய்ய முறையான வசதிகள் மற்றும் அனைத்து கேலரியிலும் மொபைல் டாய்லெட் வசதி இருக்கும்.

ஒவ்வொரு gellery-யிலும் 2 நர்ஸ் இருப்பார்கள். பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் வசதியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும், நிகழ்ச்சிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் வெளியில் வாங்கும் அதே விலைக்கு தர முடிவு செய்து சில நிறுவனங்களுடன் டை அப் செய்துள்ளோம். குறிப்பாக, தண்ணீரை இலவசமாக வழங்க ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இந்த விழா, இளையராஜாவின் 50 ஆண்டு திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முன்னதாக, நிகழ்ச்சியைக் காண வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை இணை ஆணையர் உடன் கலந்து பேசி, சில அறிவுரைகளைப் பெற்று சில மாற்றங்கள் செய்துள்ளோம். கூடுதல் பாதுகாப்பிற்காக மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பவுன்சர்கள் வரவழைக்க உள்ளோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: கேரளா ஸ்டாருடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா! கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவின் அடுத்த மூவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.