ETV Bharat / entertainment

"வீட்டு வாடகை ரூ.20 லட்சம் தராமல் எஸ்கேப்?" - யுவன் மீது வந்த புகாரால் பரபரப்பு! - Complaint Against Yuvan

Complaint Against Yuvan Shankar: வாடகை பணத்தை சரிவர கொடுக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது துபாயில் இருக்கும் தம்பதி ஆன்லைன் மூலமாக துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார் மற்றும் யுவன் சங்கர் ராஜா
புகார் மற்றும் யுவன் சங்கர் ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 1:07 PM IST

சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்த வீட்டுக்கு வாடகை தராமலும், யாருக்கும் தெரியாமலும் வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாகவும், அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துபாயில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் ஆன்லைன் மூலமாக துணை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6வது தெருவில் உள்ள ஃபஷீலத்துல் ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டின் மாத வாடகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் வைப்புத் தொகை ரூ.12 லட்சம் என அக்ரீமெண்ட் போட்டப்பட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகையை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ரூ.18 லட்சம் வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மொத்த வாடகை தொகையான ரூ.18 லட்சத்தில் ரூ.12 லட்சம் மட்டுமே காசோலையாக வீட்டின் உரிமையாளரிடம் யுவன் வழங்கியதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள ரூ.6 லட்சமும், மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை தொகையான ரூ.15 லட்சம் என மொத்தம் 20 லட்சத்திற்கும் மேல் வாடகை பணத்தை கொடுக்காமல் அந்த வீட்டை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வாடகை பணத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் யுவன் சங்கர் ராஜாவின்‌ செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்த வீட்டை காலி செய்யும் நோக்கில் கடந்த 4 நாட்களாக வீட்டில் இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் பொருட்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதாக துபாயில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரான ஃபஷீலத்துல் ஜமீலா என்பவருக்கு அக்கம் பக்கத்தினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர் ஆன்லைன் வாயிலாக யுவன் சங்கர் ராஜாவின் மீது சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, வீட்டின் உரிமையாளரான ஃபஷீலத்துல் ஜமீலா என்பவரின் உறவினரான முகமது ஜாவித் என்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “காந்தி பெயர் வைத்தால் குடிக்கக்கூடாதா?”.. வெங்கட் பிரபு கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.