ETV Bharat / entertainment

அமெரிக்க ராணுவ வீரர் தற்கொலைக்கு ஜி.வி.பிரகாஷ் உருக்கமான இரங்கல்! - israel gaza war

GV Prakash about suicide: இஸ்ரேல் - காசா போரால் மனமுடைந்த அமெரிக்க ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அமெரிக்க வீரரின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளர்.

ஜி.வி பிரகாஷ் இரங்கல்
ஜி.வி பிரகாஷ் இரங்கல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 6:59 PM IST

சென்னை: இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஐ‌.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முயன்றும் இஸ்ரேல் தனது போரை நிறுத்தவில்லை. இந்நிலையில், இஸ்ரேல்-காசா போரால் அதிருப்தியில் இருந்த அமெரிக்க வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரரான ஆரோன் புஷ்னெல், விமானப் படையில் உயர் பதவியில் இருந்து வந்துள்ளார். இவர் காசா போர் தொடர்பாக நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ராணுவ உடையில் வந்த அவர், இனிமேலும் இனப் படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன் என்று கூறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக, பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ஜோஷ்வா படத்தில் வருணின் நடிப்பு எப்படி? - மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்!

இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவரது தற்கொலைக்குப் பிறகு பல்வேறு சமூக ஆர்வலர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இசை அமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார், அமெரிக்க வீரரின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி - தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல” என பதிவிட்டுள்ளார். மக்களின் விடுதலைக்காக தன் இன்னுயிரை இழந்த அமெரிக்க வீரரான ஆரோன் புஷ்னெலுக்கு இரங்கல் செலுத்திய ஜிவி பிரகாஷ் குமாரின் பதிவு தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.