ETV Bharat / entertainment

"நடிகர் விஜய்யின் அரசியல் வருகை நல்லாருக்கும்" - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - ஜோஷ்வா

Gautham Vasudev Menon: மார்ச் 1ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் 'ஜோஷ்வா இமை போல காக்க' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லா தான் இருக்கும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

Gautham Vasudev Menon talk about Vijay political arrived
"விஜயின் அரசியல் வருகை நல்லாருக்கும்" - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 9:48 PM IST

சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள 'ஜோஷ்வா இமை போல காக்க' (Joshua Imai Pol Kaakha) திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், சென்னை பிரசாத் லேபில் நாயகன் வருண், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.

அதன்பிறகு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கௌதம் மேனன் கூறும்போது, "என்னுடைய 19வது திரைப்படம் ஜோஷ்வா வருகிற மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன். கரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இடையில் கதாநாயகிக்குத் திருமணம் நடந்துவிட்டது. ஆகையால் வெந்து தணிந்தது காடு படத்திற்குப் பிறகு இப்படத்தை வெளியிட முடிவு செய்தோம்.

மேலும் விஜய்யின் அரசியல் வருகை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு; நல்லா இருக்கும் என்றார். பின்னர் துருவ நட்சத்திரம் எப்போது வெளியீடு என்ற கேள்விக்கு, வரும் துருவம் வரும் என்று பதிலளித்தார். தொடர்ந்து த்ரிஷா பற்றிய கேள்விக்கு, யாரைப் பற்றிப் பேசியிருந்தாலும் தப்புதான் என்றார்.

விஜய்யின் கடைசி படம் நீங்கள் பண்ணும் வாய்ப்பு இருக்குமா என்ற கேள்விக்கு, எனக்குத் தெரியவில்லை கிடைத்தால் கண்டிப்பாகப் பண்ணுவேன். நான் நடித்துக் கொண்டு இருக்கிறேன் அப்படி என்றால் பீல்டில் இல்லையா நான். ஒரு படம் பண்ணவில்லை என்றாலே பீல்டில் இல்லை என்று சொல்லுகிறீர்கள், எவ்வளவு பேர் வருத்தப்படுவார்கள். எனது படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் தான் நான் இன்னும் படம் இயக்காமல் இருக்கிறேன்.

ரீ-ரிலீஸ் கலாச்சாரம் ரொம்ப நல்ல விஷயம். நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு, மிகவும் சர்ச்சையான கேள்வி இது, எப்போது ஹீரோவும், தயாரிப்பாளரும் ஒன்றாகிறார்களோ அப்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் பண்ணுவேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகப் போகும் படங்கள் லிஸ்ட் இதோ..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.