ETV Bharat / entertainment

கருடன் முதல் ஹிட் லிஸ்ட் வரை இந்த வாரம் வெளியாகும் தமிழ்ப் படங்கள்! - THIS WEEK RELEASE TAMIL MOVIES

THIS WEEK RELEASE TAMIL MOVIES: நடிகர் சூரி நடிப்பில் வெளியாகவுள்ள கருடன் திரைப்படம் முதல் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடித்துள்ள ஹிட் லிஸ்ட் வரை இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கருடன், ஹிட் லிஸ்ட் போஸ்டர்
கருடன், ஹிட் லிஸ்ட் போஸ்டர் (Credits - Actor Soori, Director KS Ravikumar X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 12:47 PM IST

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை இம்மாதம் பரவாயில்லை என்று சொல்லலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக் கொண்டு இருந்த தமிழ் சினிமாவுக்கு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த ஆண்டின் முதல் வெற்றிப் படமான இது, தற்போது வரையிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. மேலும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கவினின் 'ஸ்டார்' திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று கணிசமான வசூல் செய்தது.

இந்த நிலையில் இம்மாதத்தின் கடைசி வாரமான நாளை (31ம் தேதி) ஐந்து படங்கள் வெளியாகின்றன. சசிகுமார், சூரி கூட்டணியில் கருடன், விக்ரமன் மகன் நடிப்பில் ஹிட் லிஸ்ட், குற்றப்பின்னணி மற்றும் புஜ்ஜி அட் அனுப்பட்டி, அக்காலி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

கருடன்: எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கருடன். இப்படத்தை லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். காமெடி நடிகராக இருந்த சூரி கதை நாயகனாக உருவெடுத்து வருகிறார். அந்த வகையில் சூரிக்கு இது முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இப்படம் நாளை(வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹிட் லிஸ்ட்: இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் தற்போது தனது குருநாதருக்கு உதவும் வகையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை நாயகனாக வைத்து ஹிட் லிஸ்ட் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் கனிஷ்கா, சரத்குமார், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை கே‌எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்கள் கார்த்திக் மற்றும் சூர்யகதிர் இருவரும் இயக்கியுள்ளனர்.

குற்றப்பின்னணி: 'ராட்சசன்' படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் சரவணன். இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் 'குற்றப்பின்னணி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ள இப்படத்தை ஆயிஷா அகமல் தயாரித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லருடன் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

புஜ்ஜி அட் அனுப்பட்டி: ராம் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கலாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அக்காலி: அறிமுக இயக்குநர் முகமது ஆசிப் இயக்கியுள்ள திரைப்படம் ‘அக்காலி’. இதனை பிபிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஸ்வயம்சித்தா தாஸ், ஜெயக்குமார், வினோத் கிஷன், நாசர், தலைவாசல் விஜய், வினோதினி, தாரணி ரெட்டி, அர்ஜெய் நடித்துள்ளனர். திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படமும் நாளை திரையரங்களில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: "நான் எழுதிய பாட்டு சில படங்களுக்கு தலைப்பு கொடுத்தது" - வேட்டைக்காரி பட விழாவில் வைரமுத்து பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.