ஹைதராபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு மன அழுத்தம் குறித்து பேசியுள்ளார். கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். இது கோவாவில் நடைபெறும் 55வது சர்வதேச திரைப்பட விழாவாகும். இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
அந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், “நாம் எல்லோருக்கும் மனநல பிரச்சனைகள், மன அழுத்தங்கள் உள்ளது. நாம் அனைவரது மனதிலும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை கதைகள், தத்துவம், பொழுதுபோக்கு போன்றவை மூலம் நிரப்ப முடியும். அது உங்களுக்கு மருந்தாக அமையும். இவை வன்முறை, பாலுறவு ஆகியவற்றை விட மேலானது.
முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பேசிய போது, தனக்கு சிறு வயதில் தற்கொலை எண்ணங்கள் தோன்றியதாகவும், தனது தாயார் அந்த எண்ணங்களில் இருந்து மீண்டு வர அடுத்தவர்களுக்காக வாழும் முக்கியத்துவத்தை உணர்த்தினார் என கூறினார். மேலும் ஒருவரை நாம் பார்த்து சிரிப்பது கூட அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்: “அறிவு புகட்டி அனுப்பப்பா” ஐயப்பனை நாடிய எம்.எஸ்.பாஸ்கர்!
இந்த அறிவுரை தனது வாழ்வை மாற்றியதாகவும், அதனால் தான் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்ததாகவும் ஏ.ஆர்.ரகுமான் கூறினார். ஏ.ஆர்.ரகுமான், சாய்ரா பானு இருவரும் தங்களது திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். அந்த அறிவிப்புக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றார். இதனிடையே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த காதலிக்க நேரமில்லை படத்தின் ‘என்னை இழுக்குதடி’ பாடல் முதல் சிங்கிள் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்