ETV Bharat / entertainment

எட்டுத் தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன்! படக்குழு அப்டேட் வெளியீடு - aalan movie

aalan movie: எட்டுத்தோட்டாக்கள் புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் முழுப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருவதாக ஆலன் படக்குழு தெரிவித்துள்ளது.

எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 8:46 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் எட்டு தோட்டக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வெற்றி. எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் வைத்து ஸ்ரீகணேஷ் இயக்கிய எட்டு தோட்டக்கள் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்கத்தில் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். இப்படத்தில் வெற்றி நாயகனாக நடித்து வருகிறார். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைபாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத காதல், 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.

வாழ்வின் எதிர்பாரா நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R. எட்டுத்தோட்டாக்கள் நாயகன் வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, அருவி மதன்குமார், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், திருநெல்வேலி இடங்களிலும், காசி உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது படக்குழு படத்தின் முழுப் படப்பிடிப்பையும் நிறைவு செய்ததோடு படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை துவக்கியுள்ளது.இப்படத்தின் டீசர் டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார் தீனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.