ETV Bharat / entertainment

”சம்பளம் கொடுத்து தான் நாம் வேலைக்குச் செல்கிறோம்”.. காப்புரிமை குறித்து வெற்றிமாறன் கருத்து! - director Vetrimaaran - DIRECTOR VETRIMAARAN

Vetrimaaran: காப்புரிமை என்பது அனைத்து தளங்களிலும் இருக்கிறது. அதனை உருவாக்குபவர்களுக்கான உத்தரவாதமும், உரிமையும் தேவை என்பதை தான் நான் நினைக்கிறேன் என நெல்லையில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் புகைப்படம்
இயக்குநர் வெற்றிமாறன் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 6:30 PM IST

திருநெல்வேலி: இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள செந்தில்வேல் திரையரங்கத்தில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் பார்ப்பதற்காக வந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், ”இயக்குநர் அமீர் நடித்த திரைப்படம் பார்ப்பதற்காக வந்துள்ளேன்.

சீரியஸான அமீர் ஜாலியான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு சிறந்த படமாக இருக்கும். இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதியப் பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது, அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணம்.

விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன், திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன், வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும்” என்றார்.

பாடல் உரிமை யாருக்கு சொந்தம் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "சம்பளம் கொடுத்து தான் வேலைக்கு நாம் செல்கிறோம். காப்புரிமை பிரச்னை என்பது அனைத்து தளங்களிலும் உள்ளது. உருவாக்குபவர்களுக்கான உத்தரவாதமும், உரிமையும் தேவை என்பதை நான் நினைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,"2026ஆம் ஆண்டு முதல் அரசியலில் பணி செய்யப் போவதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. அவர்களது பணிக்குப் பின்னரே அவர்களது செயல்பாடு தெரியும். அரசியலுக்கு அனைவரும் வரலாம். அதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிவிட்டு, அதற்கானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் எனக்கு இல்லை. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி தளம் மிகப் பெரிய பலமாக இருந்தது. தயாரிப்பாளர்கள் முதலீட்டைப் பெறுவதற்கு ஓடிடி தளம் மிகப்பெரிய உதவியாக அமைந்தது. ஓடிடி தளத்தை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது.

திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு மக்கள் வந்து பார்த்தால் அதனுடைய வருவாய் கிடைக்கும். திரையரங்கில் படம் பார்ப்பது மாறப் போவதில்லை. ஆனால், திரையரங்கின் சூழல் மாறும், அங்குள்ள தன்மையும் மாறும். பொதுமக்கள் திரையரங்கிற்கு வருகின்ற நிலை மாறாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நற்பணி இயக்கத்தைப் பலப்படுத்தும் நடிகர் சூர்யா.. அரசியலுக்கு அடித்தளமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.