ETV Bharat / entertainment

கோட் இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியீடு - ரகசியம் உடைத்த வெங்கட் பிரபு! - Goat Second Single release date - GOAT SECOND SINGLE RELEASE DATE

நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதம் ரிலீசாக உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 1:43 PM IST

ஐதராபாத் : நடிகர் விஜயின் 68வது படம் தி கோட். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். அண்மையில் கோட் படத்தின் விசில் போடு பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பரவி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், கோட் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீசாகும் என்பது குறித்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டு உள்ளார்.

சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக தெரிவித்து உள்ளார். கோட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அப்டேட் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

Goat Movie Update
Goat Movie Update

அதேநேரம் கோட் படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என பயனர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெங்கட் பிரபு விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று மவுனம் காத்தார். கோட் படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபுவின் பதில் சற்று ஏமாற்றம் அளித்தது.

Goat Movie Update
Goat Movie Update

முன்னதாக இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று கோட் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார். ரஷ்யாவில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு கோட் திரைப்படம் குறித்து பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, "மாஸ்கோவில் கோட் படத்தின் மிக பகுதிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதிய பகுதிகளை இப்படத்தில் காட்ட வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் கூறி இருந்தார்.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இது தவிர்த்து மறைந்த நடிகர் விஜயகாந்தை இந்த படத்தில் ஏஐ தொழில்நுடபத்தின் மூலம் கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

இது தொடர்பாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தவிர கோட் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், சிநேகா, லைலா, அமீர் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது. யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இதையும் படிங்க : தி கோட் படத்தில் நடிகர் விஜயகாந்த்? பிரேமலா சொன்ன சீக்ரெட் என்ன? - Vijaykanth Cameo In Goat Movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.