சென்னை: தமிழில் 2017ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான "ஒரு கிடாயின் கருணை மனு" படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேம்ஜி நடிப்பில் "சத்திய சோதனை" என்ற படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில், காமெடி படமாக உருவாகியிருந்த இப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து, மக்கள் விரும்பும் யதார்த்த படங்களை எடுத்து சிறந்த இயக்குனர் என அனைவராலும் அறியப்பட்டவர். சத்திய சோதனைக்குப் பிறகு, நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை சுரேஷ் சங்கையா இயக்கி முடித்துள்ளார்.
இதையும் படிங்க: 'குபேரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (நவ.15) 11 மணிக்கு மேல் உயிரிழந்துள்ளார். அவரது உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதி அஞ்சலி செய்யப்படவுள்ளது. இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது. தமிழில் சிறந்த இயக்குனர் என்று பெயரெடுத்த அவர், திடீரென்று உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்