ETV Bharat / entertainment

Modern Masters; ராஜமெளலியின் ஆவணப்படம் ரெடி.. ரிலீஸ் எப்போது தெரியுமா? - RAJAMOULI DOCUMENTARY - RAJAMOULI DOCUMENTARY

SS Rajamouli: இயக்குநர் ராஜமெளலியின் ஆவணப்படமான மார்டன் மாஸ்டர்ஸ் படமானது வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் ராஜமெளலி
இயக்குநர் ராஜமெளலி (Photo Credits - ANI/ ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 4:37 PM IST

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறியப்பட்டார். இவரது இயக்கத்தில் இறுதியாக நடிகர் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் இண்டர்நேஷ்னல் லெவலில் அறியப்பட்டார்.

இவர் தயாரித்த பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மேலும், கடந்த ஆண்டு ஆஸ்கர் பிரிவில் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது. இதனால் உலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஜேம்ஸ் கேமரூன் போன்றோர் இப்படத்தை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் ராஜமெளலி குறித்த ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜமெளலிக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. இந்த ஆவணப்படத்திற்கு 'மார்டன் மாஸ்டர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படமானது மொத்தம் 74 நிமிடங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல விமர்சகர் அனுபமா சோப்ரா குரலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படமானது ராஜமெளலி எப்படி இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மற்றும் சர்வதேச சினிமாவில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாட்டு பாட ரூ.83 கோடி? அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் பாடும் பிரபல பாப் சிங்கர்! - Anant Radhika Wedding

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.