ETV Bharat / entertainment

தேர்தலுக்காக காத்திருக்கும் தங்கலான்.. பா.ரஞ்சித் கொடுத்த புதிய அப்டேட்!

Pa.Ranjith: 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம் எனவும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் தங்கலான் படத்தின் தேதியை முடிவு செய்து சென்சாருக்கு விண்ணப்பிப்போம் எனவும் அப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் கொடுத்த புதிய அப்டேட்
தேர்தலுக்காக காத்திருக்கும் தங்கலான்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 2:06 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர் பா.ரஞ்சித். இவர், தனது சமூக நீதி கருத்துகள் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். இவரது மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் இயக்குநராக உருவெடுத்தார். மேலும், தனது நீலம் புரொடக்சன் தயாரிப்பு நிறுவனம் மூலம், சமூக நீதி பேசும் படங்களை தயாரித்து வருகிறார்.

ஜே.பேபி திரைப்படம்: பா.ரஞ்சித் தயாரிப்பில், அவரிடம் உதவி இயக்குநராக இருந்த, அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில், நடிகை ஊர்வசி நடித்துள்ள ஜெ.பேபி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இப்படம் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை பற்றியதாக உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன்(Studio Green) கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாகவும் வெளியாகிறது. படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சமீபத்தில் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம், ஜனவரியில் ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஜே.பேபி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டார். இதில் பேட்டியளித்த அவர், தங்கலான் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "தங்கலான் திரைப்படத்தின் வேலை முழுவதுமாக முடிந்தது. நாங்கள் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். அதன்படி, எங்கள் படத்தின் தேதியை முடிவு செய்துவிட்டு சென்சாருக்கு விண்ணப்பிப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கலான் படம் நன்றாக வந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு பிடிக்கும். நான் படம் பார்த்தேன். இப்படம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. அவை அனைத்தும் உண்மையற்றவை" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் அஜித் குமாருக்கு மைனர் ஆபரேஷன்தான்! நெருங்கிய வட்டாரங்கள் தகவல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.