ETV Bharat / entertainment

ரஜினியை வைத்து நான் இயக்கிய படங்கள் மட்டும் தோல்வியா? பா.ரஞ்சித் கூறியது என்ன? - Pa ranjith - PA RANJITH

Pa ranjith: இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கபாலி, காலா ஆகிய படங்களுக்கு ஆடியன்ஸிடம் இருந்த வரவேற்பு குறித்து பேசியுள்ளார்.

பா.ரஞ்சித் புகைப்படம்
பா.ரஞ்சித் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 23, 2024, 4:58 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் சமூக நீதி கருத்துக்களை தன் படங்களின் மையக்கருவாக கொண்டு பல்வேறு படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி படத்தில் தொடங்கி மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என பா.ரஞ்சித் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.ரங்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் ரசிகர்கள் மத்தியில் தனது படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, “விமர்சன ரீதியாக பல படங்கள் சரியில்லை என கூறப்பட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களும் வெற்றி என ரசிகர்கள் கொண்டாடினாலும், நான் ரஜினியை வைத்து இயக்கிய கபாலி, காலா படங்களை மட்டும் சமூக வலைத்தளங்களில் ஏன் தோல்விப்படம் என்கின்றனர். கபாலி படம் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. அப்போது அது வெற்றி படம் தானே? காலா படம் ரஜினி ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லை.

ஆனால், மிகவும் மோசமாக படம் என்று கூற முடியாது. காலா படத்தில் தரமான காட்சிகள் இருந்தது. ஆனால், காலா படத்தை ஒரு சிலர் திட்டமிட்டு தோல்வி படமாக்கினார்கள்” என கூறினார். மேலும், அடுத்து இயக்கவுள்ள படம் குறித்து கேட்டதற்கு, இன்னும் ஓரிரு வாரங்களில் தகவல் வரும் என கூறினார். பா.ரஞ்சித் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: காதலரை கரம் பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ்.. விரைவில் திருமணம்! - Actress megha akash engaged

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.