ETV Bharat / entertainment

"நிச்சயமா வாழை 2 வரும்.. அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு" - மாரி செல்வராஜ் டுவிஸ்ட்! - Vaazhai Success Meet - VAAZHAI SUCCESS MEET

எனது கண்ணீரும், கவலையும் கலையாக மாற்றுவது எனது பெருமை. நிச்சயமாக வாழை 2 வரும், அதிலும் இதே சிறுவர்களை வைத்து எடுப்பேன் என வாழை படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் மற்றும் வாழை பட நடிகர்கள்
மாரி செல்வராஜ் மற்றும் வாழை பட நடிகர்கள் (Credits - Mari Selvaraj 'X' Page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 17, 2024, 11:02 AM IST

சென்னை: நவ்வி ஸ்டுடியோஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வாழை படத்தின் 25ஆம் நாள் வெற்றி விழாவில், அப்படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகளை இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கினார்.

இந்த விழாவில் வாழை படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் கலையரசன், நடிகைகள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "அனைவருக்கும் நன்றி, இந்த விழாவை நினைக்கையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் சமூகம் அதிகமாக இந்த படத்தைப் பற்றி பேசி விட்டார்கள். வாழை படம் எடுத்து முடித்த பிறகு இதை எப்படி கொண்டு போகப் போகிறோம் என யோசித்தபோது முதலில் இயக்குநர்கள், நடிகர்கள், நண்பர்களிடம் இந்த படத்தை போட்டு காட்டுவோம், அவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என பார்த்தேன்.

நான் அழைத்த அத்தனை பேரும் இந்த படத்தை பார்த்தார்கள். அப்படி பார்த்தது மட்டுமல்லாமல், எப்படியாவது தமிழ் சமூகத்தை இந்தப் படத்தை பார்க்க வைக்க வேண்டும் என நினைத்தார்கள். உண்மையாகவே அது எனக்கு பெரிய வெற்றியாக அமைந்தது. நான் நினைத்ததை விட சக இயக்குநர்களும், நடிகர்களும் இந்தப் படத்தைக் கொண்டாடிய விதம் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

வாழை படத்தின் வெற்றி, மாரி செல்வராஜை தமிழ் சினிமா எவ்வளவு நம்புகிறது எனவும், எனது மதிப்பு என்ன எனவும், இந்த படத்தின் மூலமாக நான் தெரிந்து கொண்டேன். ஒட்டுமொத்த திரை உலகிற்கும் நன்றி. முழுதாக ஒரு படைப்பாளியை நம்புவதுதான் மிகப்பெரிய பலம். அந்த வகையில், எனது நான்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

இதையும் படிங்க: மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி!

என் படத்தின் வெற்றியை, என்னுடன் பயணிக்கக் கூடிய உதவி இயக்குநர்கள் என் படக்குழுவினர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். நான் வாழ்ந்த வாழ்க்கையை இந்த சிறுவர்கள் மூலமாக கொண்டு வர வேண்டும் என நினைத்து நடிக்க வைத்தேன். அதேநேரம், கலையரசன், திவ்யா, ஜானகி அம்மா இவர்கள் எல்லாம் எப்படி ஒத்துக் கொண்டார்கள் என்ற சந்தேகம் வந்தது. ஆனால், அனைவரும் கதையை உள்வாங்கி நடித்தார்கள்.

மேலும், எளிமையான உண்மையான தமிழ்ச் சமூகம் என்னை எந்த அளவிற்கு நம்புகிறது என இந்தப் படம் வெளியான பிறகு புரிந்து கொள்கிறேன். திருநெல்வேலியில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் பொழுது திரையரங்கிலிருந்த 700 பேரும் படத்தின் இறுதி வரை சீட்டில் அமர்ந்திருந்தார்கள். இதுதான் எனது பெருமை, அதுதான் எனது வெற்றி.

எனது கண்ணீரும், கவலையும் கலையாக மாற்றுவது எனது பெருமை. முட்டி மோதி வந்திருக்கிறேன், கதைகள் நிறைய உள்ளது, அத்தனை கதைகளையும் சொல்லிவிட்டு தான் நான் போவேன். நான் போகலாம் என முடிவு செய்யும்போது நிறைய உருவாக்கி இருப்பேன்.

நாங்கள் நினைத்த வெற்றியை விட பெரிய வெற்றி கிடைத்துள்ளது, இந்த வெற்றியை என்னால் கையாள முடியவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் வாழை திரைப்பட குழுவின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மாவிற்கும் எமக்குமான உறவு தான் வாழை.

அன்று அந்த சம்பவத்தின் போது ஜாதி, மதத்தை கடந்து அன்று உண்மையாக காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்கள் அந்த உண்மை இப்போது வெளியே வந்திருக்கிறது. அவர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை சம்பவத்தில் தப்பித்தவர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் வெற்றி எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த ஆஸ்கார் விருது போல கருதுவோம். நிச்சயமாக வாழை 2 வரும் அதிலும் இதே சிறுவர்களை வைத்து எடுப்பேன். இதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கிறது அது இன்னும் உங்களை புரிந்து கொள்ள வழிவகுக்கும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.