ETV Bharat / entertainment

”இரண்டு மாத உழைப்பு வீண்”.. - 'கூலி' பட காட்சிகள் கசிந்தது குறித்து இயக்குநர் லோகேஷ் வருத்தம்! - coolie leaked video - COOLIE LEAKED VIDEO

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் நாகர்ஜூனா நடித்துள்ள சில காட்சிகள் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளது குறித்து லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கூலி போஸ்டர்கள்
கூலி போஸ்டர்கள் (Credits - lokesh kanagaraj X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 9:48 PM IST

Updated : Sep 18, 2024, 10:48 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கடந்த வருடம் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் நாகர்ஜூனா, உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் ஷஹீர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க : 'கூலி' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நாகர்ஜுனா? - Nagarjuna in coolie

இந்நிலையில் இப்படத்தில் நாகர்ஜூனா நடித்துள்ள காட்சியானது தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் தனது வருத்தை தெரிவித்துள்ளார். அதில், 'ஒரு பதிவினால் பலரின் இரண்டு மாத உழைப்பு வீணாக போனது. ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 18, 2024, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.