ETV Bharat / entertainment

ஜோஷ்வா படத்தில் வருணின் நடிப்பு எப்படி? - மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்! - ஜோஷ்வா இமை போல் காக்க

Gautham Vasudev Menon: ஜோஷ்வா படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் பாடி டபுள் இல்லாமல் நடித்த வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

Gautham Vasudev Menon
ஜோஷ்வா இமை போல் காக்க
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 3:59 PM IST

சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான இயக்குநர் என்று பெயர் பெற்றவர். இந்த நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் நடிப்பில் 'ஜோஷ்வா இமை போல் காக்க' என்ற படம் வெளியாக உள்ளது.

இந்தப் படம் மார்ச் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனுபவத்தைப் பற்றி தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எந்தவொரு நடிகரையும் வைத்து ஆக்‌ஷன் படம் எடுப்பது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம். பாடி டபுள், துல்லியமான திட்டமிடல், ரிஸ்க் என பல விஷயங்கள் ஆக்‌ஷன் படங்களை உருவாக்குவதில் உள்ளது.

இருப்பினும், வருணுடன் பணியாற்றுவது ஒரு இனிமையான அனுபவம். அவர் படப்பிடிப்பைத் தொடங்க ஆர்வமாக இருந்ததோடு, கதாபாத்திரத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் உறுதியாக இருந்தார். இந்த திரைப்படத்தில் ஆக்‌ஷன் முக்கிய பங்கு வகிக்கும். அதே வேளையில், கதையோட்டத்தில் எமோஷன் மற்றும் காதலும் பின்னிப் பிணைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, வருண் கதையில் வரும் அனைத்து ஸ்டண்ட்களையும் பாடி டபுள் இல்லாமல் செய்தார். அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இதுமட்டுமல்லாது, தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு வருண் உயிர் கொடுத்துள்ளார். நடிகை ராஹேவின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கும்.

கிருஷ்ணா வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என்று ஆரம்பத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அவர் ஒத்துக் கொண்டதோடு, செட்டில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஸ்டண்ட் டீம் சிறப்பான பணியைச் செய்துள்ளார்கள். திரையரங்குகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்" என்று கூறினார்.

மேலும், 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ராஹே கதாநாயகியாகவும், நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதையும் படிங்க: நாளை வெளியாகிறது 'வடக்கன்' ஃபர்ஸ்ட் லுக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.