ETV Bharat / entertainment

ரிலீசாகும் முன்பே வாழை படத்திற்கு குவியும் பாராட்டு.. கண்ணீர் விட்ட பாலா! - Mari selvaraj vaazhai - MARI SELVARAJ VAAZHAI

Vaazhai: வாழை திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர் பாலா, நடிகர் சூரி உள்ளிட்ட பலர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

மாரி செல்வராஜை பாராட்டிய பாலா, சூரி
மாரி செல்வராஜை பாராட்டிய பாலா, சூரி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 22, 2024, 5:51 PM IST

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார். இதுவரை திரையில் பேசத் தயங்கும் கதாபாத்திரங்களை தனது படத்தின் கதை மாந்தர்களாக்கி, அவர்களது துயர வாழ்வை செல்லுலாய்டில் படம்பிடித்து காட்டியவர் மாரி செல்வராஜ். இதுவரை 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' உள்ளிட்ட சமூகநீதி பேசும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் கபடி விளையாட்டு வீரரான மானத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என கூறப்படுகிறது. தற்போது இவரது இயக்கத்தில் உருவான 'வாழை' என்ற திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 23) வெளியாகிறது. கலையரசன் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள வாழை படத்தை மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். மாரி செல்வராஜ் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும். மாரி செல்வராஜின் வாழ்க்கையைத் தழுவி வாழை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

அந்த வகையில், இயக்குநர் பாலா வாழை படத்தை பார்த்து, மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்த பாலா, சில நிமிடங்கள் மாரியின் கைகளை பற்றியபடி பேச முடியாத நிலையில் அமர்ந்திருந்தார். நடிகர் சூரியும் படம் பார்த்துவிட்டு மாரி செல்வராஜுக்கு முத்த மழை பொழிந்தார்.

முன்னதாக, இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்டோரும் வாழை படத்தை பார்த்து விட்டு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். நாளை வெளியாக உள்ள வாழை திரைப்படம் மாரி செல்வராஜுக்கு நிச்சயம் பல விருதுகளைப் பெற்றுத் தரும் என்று இப்போதே கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அந்த ஏவிஎம் உருண்டை இருக்குற இடத்துக்குப் போகனும்.. சென்னையின் சினிமா ஸ்டூடியோக்கள் வரலாறு தெரியுமா? - Madras Day 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.