ஹைதராபாத் : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜுனா நடிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம் குபேரா. இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Her character intrigues with every layer!
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) July 2, 2024
Meet @iamRashmika from #SekharKammulasKubera on July 5th 🔥@dhanushkraja King @iamnagarjuna @sekharkammula @jimSarbh @Daliptahil @ThisIsDSP @SVCLLP @amigoscreation @AdityaMusic @KuberaTheMovie #Kubera pic.twitter.com/fTnehiCqKH
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, படத்திலிருந்து நடிகர் தனுஷ், நாகர்ஜுனாவின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நடிகை ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தில் நடித்து இந்தி ரசிகர்களைக் கவர்ந்தார். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கும் சிகந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரலட்சுமி-நிக்கோலாய் திருமண கொண்டாட்டம்... ஒன்று கூடும் திரை, அரசியல் பிரபலங்கள்! - Varalaxmi Marriage